Advertisement

அத்தியாயம் பதினொன்று :

நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது!!!

இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே, டாக்டர் ரௌண்ட்ஸ் வந்தார். வந்தவர் ராஜாராமின் நிலை குறித்து விளக்கி சொல்ல, புரிந்தது போலவும் இருந்தது புரியாதது போலவும் இருந்தது இருவருக்குமே… நிறைய காம்ப்ளிகேஷன்ஸ்…

மேலே என்ன செய்யலாம் என்று இரண்டு மூன்று ஆப்ஷன்களை சொல்லி மருத்துவர் கேட்க, முரளிக்கு சட்டென்று சொல்லத் தெரியவில்லை.

“டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றோம் டாக்டர்” என்ன்று ஈஸ்வர் தான் சொன்னான்.

அவர் சென்றதும் ரஞ்சனிக்கு அழைத்தவன், “ரஞ், எங்க இருந்தாலும் உடனே இங்க வா” என்றான்.

அரை மணிநேரத்தில் ரஞ்சனியும் வந்துவிட, “என்ன செய்யலாம் சொல்லு” என்று கேட்க…

“இருங்க நான் டாக்டர் பார்த்துட்டு வர்றேன்” என்று அவள் கிளம்பும் நேரம், பத்மநாபனும் கமலம்மாவும் வர்ஷினியும் வந்தனர்.

“டாக்டர் என்ன சொன்னார்” என்று பத்துவும் கேட்க,

“சில ஆப்ஷன்ஸ் சொன்னார் ட்ரீட்மென்ட்க்கு, அதுதான் ரஞ்சனியை கூப்பிடேன், அவளுக்குக் கொஞ்சம் தெரியுமில்லையா” என்று முரளி சொல்ல…

ரஞ்சனியைப் பார்த்தான், “நான் போய்க் கேட்டுட்டு வர்றேன்” என்று அவள் கிளம்ப,

“நானும் வர்றேன்கா” என்றாள் வர்ஷினி.

“நீயா, நீ சின்னப் பொண்ணு! வேண்டாம்!” என்று ஸ்ட்ரிக்டாக மறுத்த ரஞ்சனி, “நீங்க வாங்கண்ணா” என்றாள் முரளியைப் பார்த்து,

அதற்குள் “இல்லை, நான்….!” என்று வர்ஷினி மறுத்துப் பேச, உதட்டின் மேல் கைவைத்து “ஷ், சொன்னாக் கேட்கணும்” என்று கண்டிப்பாக சொன்னாலும், அது ஒரு சிறு குழந்தைக்கு நாம் சொல்லும் த்வனியே,

அந்த த்வனி பத்மனாபனை, ரஞ்சனியின் புறம் சற்றுக் கவனிக்க வைத்தது.

முரளி கிளம்பவும், “நான் வரட்டுமா” என்றான் பத்மநாபன்.

“ஓஹ் எஸ் வாங்க!” என்றாள்.

“நீ இரு” என்று முரளியிடம் சொல்லி பத்மநாபன் ரஞ்சனி உடன் சென்றான்,

செல்லும் போதே “நீங்க என்ன பண்றீங்க?” என்று ரஞ்சனி பத்துவிடம் விசாரித்துக் கொண்டே செல்வது கேட்டது. இருவரும் வரக் கிட்ட தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிற்று.

“கமலம்மா இன்னம் காணோம்… என்னவோ?” என்று பயந்து அமர்ந்து இருந்தார்.

“என்ன? என்ன சொன்னாங்க” என்றார்.

“மா! ஹார்ட் அட்டாக் இல்லையா? அதனால மருந்து மாத்திரை குடுக்கலாமா இல்லை ஆபரேஷன் பண்ணலாமா கேட்டாங்க!” என்றாள். அது கமலம்மாவிற்காக அவள் சொல்லும் பதில் என்று அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது அவரைத் தவிர.

“எங்களை விட உங்களுக்குத்தான் தெரியும்! சோ நீங்க எது சரின்னு ஃபீல் பண்றீங்களோ பண்ணுங்கன்னு உங்க பையன் சொல்லிட்டார்” என்று பத்துவைக் காட்டினாள்.

அவனும் “ஆம்” என்பதுப் போல ஆமோதிக்க, இதையெல்லாம் பார்த்திருந்த ராஜாராம் “டாக்டரை நான் பார்க்கணும்னு சொன்னேன்னு சொல்லு” என்றார்.

“சரி, சொல்றேன்” என்று ஓரே வார்த்தையில் பத்மனாபன் முடித்து விட்டான். அவர் முன் எந்த விவரங்களும் பேச முடியவில்லை.

கமலம்மாவை விட்டு எல்லோரும் வெளியில் வர, எல்லோரும் என்ன பேசுகிறார்கள் என்பது போல வர்ஷினி கவனித்து நிற்க “நீ அம்மாவோட இரு, அவங்க ரொம்ப கவலையா இருக்காங்க” என்றான் பத்மநாபன்.

“அம்மா கவலையா இருக்காங்கன்னு சொல்றீங்களா, இல்லை நான் இங்க இருக்க கூடாதுன்னு சொல்றீங்களா” என்றாள் அண்ணனிடம் பளிச்சென்று வர்ஷினி.

“ரெண்டும் தான் போ!” என்று பத்து அதட்ட, அவனை முறைத்துக் கொண்டு அப்படியே தான் நின்றாள்.

“சொன்னாக் கேளு போடா!” என்று சற்று தணிவாக கெஞ்சலாக பத்மநாபன் சொல்லவும் தான் சென்றாள், அப்போதும் முறைத்துக் கொண்டே தான் சென்றாள்.

வர்ஷினி ஹாஸ்பிடல் வந்ததில் இருந்து, அவள் புறம் கண்ணோ, மனமோ, யோசனைகளோ செல்லக் கூடாது என்று கடிவாளமிட்டு இருந்தான். அது அவளின் இந்த பாவனையில் தறி கெட்டு ஓட ஆரம்பித்தது.

வர்ஷினியின் முக பாவனைகளைப் பார்த்திருந்தவன், அவள் திரும்பி நடக்கவும் அவளின் உடைகளை ஆராய்ந்தான், ஒரு பேகி பேன்ட் அதன் மேல் ஒரு ஷர்ட், இடை வரை நீண்ட கூந்தல், ஒரே அளவாக பின்னல் மேலிருந்து கீழ் வரை, அதுவும் ஒரு மாதிரி அந்த பேன்ட் ஷர்ட்டிற்கு ஸ்டைலாக இருந்தது. அவள் கதவை திறந்து உள் செல்லும் வரை பார்வையை அகற்ற முடியவில்லை.

அந்த கதவு மூடிய பின் சுற்றம் நினைவில் வர, யாரும் கவனித்து விட்டார்களா என்று பார்க்க, மூவரும் கவனிக்கவில்லை.

“ஹப்பா” என்று ஆசுவாசப் பெருமூச்சுவிட்டான்.

ரஞ்சனி ஏதோ தீவிரமாக இருவரிடமும் சொல்லிக் கொண்டு இருந்தாள். “நான் இருக்குறதைச் சொல்றேன், ரொம்ப சீரியஸ் தான், ஆனா கண்டிப்பா வாழ்நாளை ஒரு ஆறு மாசம் இல்லை ஒரு வருஷம் கூட நீட்டிக்கலாம். ஆனா அதுக்கு பேஷன்ட் கோஆபரேட் பண்ணனும்”.

ஆறு மாதம்! ஒரு வருடம்! மக்கள் இருவருக்கும் மனது துடித்தது. உண்மையில் தந்தையின் நிழலில் முழுவதுமாக இதுவரை இருந்தார்கள் என்பது தான் உண்மை.

“அண்ணா! சொல்றதுக்கு கஷ்டமா தான் இருக்கு, ஆனா சொல்லி தான் ஆகணும்! நீங்க அவருக்கு நல்ல மகன்களா இருந்தீங்கன்னா, நீங்க கடவுள் கிட்ட அவர் உயிரோட இருக்கணும்ன்னு வேண்டாதீங்க, அவருக்கு அதிக வலியில்லாத முடிவை கடவுள் கொடுக்கணும்னு வேண்டிக்கங்க” என்றாள் முரளியைப் பார்த்து.

“எப்படி, எப்படி, இவ்வளவு லாஸ்ட் ஸ்டேஜ் வரும்வரை எங்களுக்கு தெரியாம இருந்தது”.

அதற்கு பதில் ரஞ்சனிக்குத் தெரியும்! ஆனால் எப்படி சொல்வாள்! ஒரு டாக்டர் மட்டும் என்றாள் சொல்லி விடுவாள். ஆனால் அண்ணன் இருக்கின்றான், அண்ணனின் நண்பன், அவனின் தம்பி.

அவர்களிடம் எப்படி சொல்லுவாள் உங்களின் தந்தை அவரின் உல்லாச வாழ்க்கைக்கு சில மருந்துகளை எடுத்துக்கொள்ள, அது அவருக்கு அவரின் உண்மை நிலையைத் தெரியவிடவில்லை என்று. இப்போது ஹார்ட் அட்டாக் வந்ததினால் தான் மற்ற பாகங்களின் தொந்தரவுகள் தெரிய வந்தது.

“சில சமயம் ஆகும்” என்று பேச்சை முடித்தாள், டாக்டர் ஆப்ஷன்ஸ் சொல்றாங்க, பட் நாங்க சொல்லிட்டு வந்துட்டோம், நீங்களே முடிவெடுங்கன்னு”

“நான் அம்மாக்கிட்ட உள்ள பேசிட்டு இருக்கேன்” என்று சொல்லி ரூமின் உள் சென்றாள்.

கமலாம்மாவின் அருகில் சென்றவள் “அம்மா பயப்படாதீங்க தைரியமா இருக்க்கணும், உங்க தைரியம் தான் சீக்கிரம் அவரை குணமாக்கும்” என்றாள்.

இதைப் பார்த்துக்கொண்டு தான் வர்ஷினி அமர்ந்திருந்தாள். ஆனால் என்னவென்று கேட்கவில்லை.

கமலம்மா ரஞ்சனியிடம் மேலும் மேலும் கேள்விகள் கேட்க, எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

அதற்குள் ராஜாராமை சி டீ ஸ்கேன் எடுக்க அழைத்துப் போக வந்தனர்.

முரளியும் பத்மநாபனும் அவருடன் செல்ல, கமலம்மாவும் ரஞ்சனியும் பேச, மெதுவாக அந்த இடத்தை விட்டு வெளியே வந்த வர்ஷினி, அந்த இடம் விட்டு அகன்று கார் பார்க்கிங் இருந்த இடத்தில் ஒரு நிழல் குடையில் அமர்ந்து கொண்டாள்.

அவள் ரூம் விட்டு வெளியே வந்த போது ஈஸ்வர் பார்த்துக் கொண்டுதானிருந்தான். வர்ஷினியும் ஈஸ்வரை பார்த்தால் தான். ஆனால் பேச முற்படவில்லை. அவள் பாட்டிற்கு செல்ல, அவள் பின் செல்ல துடித்த கால்களையும் மனதையும் மீண்டும் கடிவாளமிட்டான்.

எவ்வளவு நேரம் தாங்கும் என்று அவனுக்கு தெரியாத பட்சத்தில், முன்பே ஒரு பெண்ணிடம் காதல் சொல்லி விட்டேன், இப்போது இந்த பெண் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் மனம் அவளின் பின்னே செல்கிறதே இது என்ன என்ற சுய ஆரய்ச்சி?

சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருக்க, “டேய் அண்ணா, ஆன்ட்டி ரொம்ப டையர்ட்டா ஃபீல் பண்றாங்க காபி டீ ஜூஸ் ஏதாவது வாங்கிட்டு வர்றியா இல்லை நான் போகட்டுமா” என்று வந்து நிற்க,

“நான் போறேன்!” என்றபடி எழுந்து போனான், கேண்டீன் போய் ஜூஸ் வாங்கி வரும் பொழுது அங்கே ஒரு நிழலில் தனியாக அமர்ந்து வெறித்துக் கொண்டிருந்த வர்ஷினி பட, அதற்கு மேல் கட்டுப்பாடிட மனமே விழையவில்லை.

ஜூஸை சென்று ரஞ்சனியிடம் கொடுத்தவன், நேராக வர்ஷினியிடம் தான் வந்தான்.

வந்தவன் அருகில் அமர்ந்தான், வர்ஷினி அவனைப் பார்க்க, “என்கிட்ட என்ன பிரச்சனைனாளும் சமாளிக்கலாம் சொல்ற, நீயேன் இப்படி உட்கார்ந்து இருக்க”

பதில் சொல்லாமல் “ஒன்றுமில்லை” என்பதுப் போல அவனைப் பார்த்து தோளைக் குலுக்கினாள்,

அந்த நீல நிறக் கண்கள் அவனைப் பார்க்க, இந்த முறை அந்த வார்த்தையை சொல்லியே விட்டான்,  you have  beautiful eyes, its calling me to sink, என்று வார்த்தையை நிறுத்தினான். அவன் சொல்லாமல் விட்டது “sink in you”   

ஆனால் ஈஸ்வர் முழுதாக சொல்லாத போதே, “என்ன சொல்கிறான் இவன்” என்று விழிவிரித்துப் பார்த்தாள்.

“அழகான கண்கள்” என்றான் மீண்டும் அதைப் பார்த்தபடி…

“அது லென்ஸ்” என்றாள்.

“என்ன லென்ஸ்ஸா?” என்ற கேட்ட போது அதிர்வு அவன் கண்களில்,

பின்னே, அவனை எவ்வளவு தடுமாற செய்தது! செய்கிறது!

“கொடு” என்று கையை நீட்டினான்.

“இவன் என்ன லூசா”, என்பது போல வர்ஷினி பார்த்தாள்.

கண்டுகொள்ளாமல் “கண்ல இருக்கிறதை எடுத்துக் கொடு” என்றான் சீரியசாக.

எதற்கு இவ்வளவு சீரியஸ்னஸ் என்று புரியாமல் “no! not! sorry! this is from my mom” என்றுரைக்க,

“do you know your mom”

“sorry this is my very personal!”

அதற்கு மேல் எதையும் ஈஸ்வர் கேட்கவில்லை, என்ன பேசுவது என்றும் தெரியவில்லை, ஈஸ்வரின் பேச்சு அதிகப்படியா என்று வர்ஷினி யோசிக்க முடியாதபடி அவளின் அம்மாவைப் பற்றி பேச்சு வர, அப்படியே அமர்ந்து இருந்தாள்.

அதற்குள் எங்கே இருவரையும் காணோம் என்பது போல ரஞ்சனி இவர்களைத் தேடி வந்தாள், தூரத்தில் ஈஸ்வர் வர்ஷினியிடம் அருகில் அமர்ந்து கொண்டிருப்பது தெரிய,  இவன் என்ன செய்கிறான் இங்கே என்ற யோசனையோடு வந்தாள்.

அவர்களைப் பார்த்துக் கொண்டே நடந்து வர வர “இந்த ஐஷ் இவன் பேசமாட்டேன் என்கின்றான் என்று என் உயிரை எடுக்கிறாள். இவன் ஹாயாக உட்கார்ந்து இருக்கிறான். ஒரு வார்த்தை அவளுடன் பேசினால் என்ன?” என்று தான் தோன்றியது.

இதில் வர்ஷினியை மறந்தாள்,

“விஷ்வா என்ன பண்ற இங்க?” அருகில் வந்தவுடனே சற்று அதட்டலாக கேட்டாள்.

சாதரணமாக கேட்டாலே ஈஸ்வர் கோபம் கொள்வான். இதில் வர்ஷினி முன் சொல்லவா வேண்டும் “ஏன்? உனக்கு அதுல என்ன பிரச்சனை” என்றான் அவனும் சுள்ளென்று,

என்ன நடக்கிறது என்றே புரியவில்லை வர்ஷினிக்கு, தன்னுடன் ஈஸ்வர் இருப்பதை தான் ரஞ்சனி சொல்கிறாள் என்று புரிந்து வர்ஷினி எழுந்து செல்ல,

“ஹேய் வர்ஷ்! நீ எங்க போற?” என்றாள் ரஞ்சனி.

“என்னோட இருக்குறதுனால தானே அப்படிக் கேட்டிங்க அக்கா,  அதான் போறேன்” என்றாள் முகத்திற்கு நேராக.

“நோ, நோ, அது அப்படியில்லை! இது வேற டென்ஷன்!” என்றாள் அவசரமாக ரஞ்சனி.

“எனக்கு அது எப்படித் தெரியும்! கொஞ்ச நேரம் முன்ன தான் சின்ன பொண்ணு போ சொன்னீங்க! இப்ப இப்படிப் பேசறீங்க! அப்போ என்னை அவாய்ட் பண்ணறீங்கன்னு தானே தோணும்”

“உன்னையா? உன்னை நான் ஏன் அவாய்ட் பண்ணனும்?”

“எனக்கு அது எப்படி தெரியும்?” என்றாள் தோளைக் குலுக்கி அலட்சியமாக ரஞ்சனியை நேர்ப் பார்வை பார்த்து.

“ஹேய் வர்ஷ்! என்ன பேசற நீ?” என்றாள் ரஞ்சனி, எதற்கு இந்தச் சிறு பெண்ணிற்கு கோபம் என்று புரியாமல்.

“he was talking to me. you just came and shouted at him means what should i think”

ரஞ்சனிக்கு வார்த்தைகளே சட்டென்று வரவில்லை.

“இல்லை, வர்ஷினி ரஞ் அப்படி எப்பவுமே பண்ண மாட்டா” என்று ஈஸ்வர் பேச,

“ஆனா எனக்கு அது எப்படித் தெரியும், அப்பா ஒரு வாரமா ஹாஸ்பிடல்ல இருக்காரு, ஹார்ட் அட்டாக்ன்னு கூட்டிட்டு வந்தாங்க! ஆனா என்கிட்டே யாரும் எதுவும் சொல்ல மாட்டேங்கறாங்க! நானா யாரவது பேசும் போது போய் நின்னா நீ போ! நீ போ சொல்றாங்க!”

“இன்னைக்கு நீங்க இருந்தீங்கன்னு தான் வந்தேன்க்கா” என்று ரஞ்சனிய காட்டியவள் “நீங்களும் போ சொல்லிட்டீங்க! இப்ப வந்து இவர்கிட்ட கத்துறீங்க. நான் என்ன நினைப்பேன்”

“இந்த வீட்டுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு அப்பா மட்டும் தான்! அவருக்கு என்னன்னு எனக்கு தெரியவேணாமா! எல்லோரும் என்னை அவாய்ட் பண்ற மாதிரி தான் தோணுது” என்று சொல்லும் போதே குரல் கம்மியது.

“எல்லோரும் பல சமயம் அப்படித் தான் பார்ப்பாங்க எனக்கு அது ப்ராப்ளம் இல்லை”

“ப்ச்! அப்படி எல்லாம் யாரும் பார்க்கலை! நீ உன்னைக் குறைவா நினைக்காத” என்று ரஞ்சனி பேச,

“நான் எங்க என்னை குறைவா நினைச்சேன். i am just talking about the fact. உங்க அண்ணா இவர் கூட என்னை கல்யாண மண்டபத்துல ஏதோ வேலையாள் மாதிரி பேசினார். ஏன் பேசணும்? முரளி அண்ணா பிரண்ட் தானே. என்னைப் பத்தி தெரியாதா? அப்பவும் பேசினாங்கன்னா…. எல்லா பொண்ணுங்க கிட்ட இப்படி பேசுவாங்களா? ஆமாவா? இல்லையா? கேளுங்க!” என்று ஈஸ்வரைக் கை காட்டினாள்.

ஐயோ என்றானது ஈஸ்வருக்கு! செய்யும் வகைத் தெரியாது ரஞ்சனியை முறைத்து நின்றான், அப்படி ஒரு அடக்கப்பட்ட கோபம்.

“ஷ்! தப்பு பண்ணிட்டேன் போலவே!” என்று ரஞ்சனி நினைக்க,

“it happens always, no worries” என்று சொன்ன வர்ஷினி, “எதுக்குக் கேட்கறேன்! அப்பாவுக்கு ஏதாவதுன்னா i should mentally prepare my self na” என்று அவள் சொல்லும் போதே கண்களில் கண்ணீர் எட்டி பார்த்துவிட, இப்படி சொல்லி விட்டோமே என்று மனமும் வருந்த,

நிற்காமல் நடந்துவிட்டாள், சரியாக அந்த நேரம் தாஸ் வர, “தாஸண்ணா நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்று அவள் சொல்ல, ஈஸ்வரியும் ரஞ்சனியையும் பார்த்துக் கொண்டே தாஸ் வண்டியை எடுக்க, கார் போயே விட்டது.

தலையைப் பிடித்து ரஞ்சனி அமர்ந்து விட்டாள்.

“நம்ம தான் உலகத்திலேயே ஸ்மார்ட்ன்னு இருக்கக்கூடாது ரஞ்சனி!” என்று அவன் சொன்ன விதம், என்ன செய்திருக்கிறாய் நீ என்று அடக்கப்பட்ட கோபத்துடன் குற்றம் சுமத்ததியது…

நடந்தது அவளுக்கும் வருத்தமே! ஒரு நூலிழைக் கூட வர்ஷினியை வருத்தப்படுத்த ரஞ்சனி நினைக்கவில்லையே, “உன்னை யாரு என்னை இங்க வர சொல்ல சொன்னா” என்று ஈஸ்வர் மீது பாய,

“என் ஃபிரண்ட்ன்னு நான் ஹெல்ப்க்கு கூப்பிட்டா, நீ இப்படிப் பண்ணுவியா”

“நான் என்ன வேணும்னா பண்ணினேன்! நான் இந்த மாதிரி எல்லாம் யோசிக்கவேயில்லை, உன் ஃபிரண்ட்ஸ்னா நீ பண்ண வேண்டியது தானே! என்னை ஏன் இப்படி கூப்பிட்ட, இப்ப அவ என் மேல கோபமா போறா! நான் அந்த மாதிரி எல்லாம் நினைக்கவேயில்லை! நீ வர்ஷினியை பேட் டா ட்ரீட் பண்ணியிருக்க”

“உனக்குப் பொண்ணுங்கன்னா இளக்காரம்! ஐஷ் எத்தனை தடவை கூப்பிடறா, நீ போன் பேசறியா! கூலா இந்த பொண்ணு கிட்ட பேசிட்டு இருக்க! அந்த கோபத்துல தான் உன்கிட்ட பேசிட்டேன்” என்று பொரிய,

“எனக்கு இருக்குற பணப் பிரச்சனைக்கு ஐஷ் குடுப்பாளா, பிரச்சனை அதிகமானதே அவங்க அப்பாவால, அஸ்வின்னால, இதுல நான் எப்படி ஒண்ணுமே நடக்காத மாதிரி சகஜமா பேச முடியும். அந்தக் கோபம் இருக்காதா?”

“இந்தப் பொண்ணுக் கிட்ட ஏன் பேசறேன்னா, இவளால நமக்குப் பணம் கொடுக்க முடியும், இல்லை இவ சொன்னா அவங்கப்பா கொடுப்பார்! புரிஞ்சதா!” என்றான் தெளிவாக. ரஞ்சனியிடம் பணத்திற்காக தான் பேசினேன் என்று கொண்டு வர நினைத்தான்.

“அப்போ நீ அவளை ஏமாத்துறியா” என்றாள்.

ஏற்கனவே தன் எண்ணங்கள் தவறு என்பது போல சற்று குற்ற உணர்ச்சியில் இருந்தவன், “என்ன உளர்ற! நான் என்ன அவக்கிட்ட லவ் டைலாக் பேசி அவளை ஏமாத்துறனா! ஜஸ்ட் ஒரு இயல்பான சூழ்நிலை க்ரியேட் பண்றேன்!” என்றான் காட்டமாக.

ஆனால் ரஞ்சனி விடாமல் “அப்போ வர்ஷினியைப் பத்தின உன் ஒப்பினியன் அப்படியே தான் இருக்கா! பணத்துக்காக பேசறியா” என்றாள்.

“எவ்வளவு தெளிவா பேசறா? அவளை ஏமாத்த முடியும்ன்னு நீ நினைக்கறியா?”

“விஷ்வா, நான் எது பேசினாலும் எல்லோரும் தப்பா எடுக்கறீங்க”

தன்னுடைய தப்பு எண்ணங்களை ஒட்டி ரஞ்சனியின் கேள்வி செல்வதாக மனதில் தோன்ற, “ஏய்! உன் பிரச்சனை என்ன? நான் அவக்கிட்ட எதுக்கு பேசினா உனக்கு என்ன? இப்ப எதுக்கு இந்த அனாலிசிஸ், என்னை என்ன நினைச்சிட்டு இருக்குற நீ” என்று கோபமாக அடிக்குரலில் சீறினான்.

ரஞ்சனி ஏதோ பேச வர,

“நீ வாயை மூடிட்டு இரு, தங்கைனாலும் ஒரு லிமிட் இருக்கு! க்ராஸ் பண்ணாத!”

“வா முதல்ல வீட்டுக்கு கிளம்பலாம்” என்று செல்ல,

இப்படி ஈஸ்வர் எப்போதும் பேசியதில்லை, “எப்பவும் நான் என் மனசுல பட்டதை பேசுவனே. இவன் எதுக்கு இப்ப இவ்வளவு கோபப்படறான்” என்று புரியாமல்,

“நான் அங்க ஆன்ட்டி கிட்ட சொல்லிட்டு வரேன்” என்று ரஞ்சனி செல்ல,

“நான் போயிட்டு டிரைவர் அனுப்பறேன்” என்று நிற்காமல் சென்று விட்டான்.

“போடா, எனக்கு உன்கிட்ட எந்த லிமிட்டும் கிடையாது” என்று ஈஸ்வரை வாய் விட்டுத் திட்டினாள், மனதில் “வர்ஷினியை ஹர்ட் பண்ணிட்டோமே” என்ற கவலை தான் இருந்தது.

நான் செய்வது தவறு! அந்த தவறை தவறில்லாமல் செய்ய வேண்டும்! இல்லை தவறும் தவறாகி விடும்!!! 

 

 

Advertisement