Vaanam Vasappadum Thooram - Intro

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

முயற்சி எனும்
ஏணி இருந்தால்
வாழ்க்கை மட்டுமல்ல
வானமும் வசப்படும்.....


“வானம் வசப்படும் தூரம்” புதிய கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன் தோழமைகளே....

"பிருந்தாவனம்"

கறுப்பு கிரானைட் கல்லில் தங்கக்கலரில் மின்னிய வீட்டுப் பெயரை ஆசையோடு தடவிக் கொண்டே முந்தானையால் துடைத்துவிட்டாள் அனுபமா. வாசல் தெளித்து சின்னதாய் கோலமிட்டு புன்னகையுடன் முன்னில் இருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.

“என் துளசிக்குட்டி பெருசா வளர்ந்துட்டாளே.... நிறையப் பூ எல்லாம் விட்டு தளதளன்னு பார்க்க என் கண்ணே பட்டிரும்போல இருக்கடி செல்லம்........” சந்தோஷத்துடன் பூந்தொட்டியில் இருந்த துளசிச் செடியிடம் கூறியவள், மற்ற செடிகளையும் கவனித்துவிட்டு வாசல் வேலை முடிந்து வீட்டுக்குள் நுழைந்தாள்.

எப்போதும் சிரித்த முகத்துடன் எல்லா விஷயத்தையும் ஈடுபாட்டோடு செய்யும் அனுபமாவைக் காணும் போதெல்லாம் எதிர்வீட்டு பத்மாவுக்கு அதிசயமாய் இருந்தது. அன்பான கணவன் பரத் அரசாங்க உத்தியோகம், பிள்ளைகள் தன்யா, தினேஷ் படித்துக் கொண்டிருந்தனர்..... அந்த வீட்டில் எல்லாரது உலகமும் அனுவை சுற்றியே சுழன்று கொண்டிருக்கும். தம்பதியருக்குள் இருந்த புரிதலும் அன்னியோன்யமும் பத்மாவுக்கு வியப்பாய் இருந்தது. இவர்களுக்குள் சண்டையே வராதா... என நினைத்துக் கொள்வாள்.

விரைவில் முதல் பதிவுடன் வருகிறேன்.....

நட்புடன் உங்கள்
லதா பைஜூ.
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த பத்மாவுக்கு, ஏன் இவ்வளவு
கெட்ட எண்ணம், லதா பைஜூ டியர்?
அடுத்தவங்க, நல்லா இருந்தா,
இவளுக்கு பொறுக்காதா பா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top