Thamizhan!!!

Advertisement

Sasideera

Well-Known Member
உலகின் ஆதி மனிதனும் ஆதி மொழியும் அவனே!!!

உலகின் ஆதி நாகரிகமும் உயிரின் ஆதாரமான விவசாயமும் அவன் ஆதி தொழிலே!!!

உலகில் பல மொழிகளின் தாயும் இவன் மொழியே!!!

எதிரியாக இருந்தாலும் விருந்தோம்பல் செய்ததாலே இன்றும் அவனைச் சுற்றி பல வண்ண மலர் இனங்கள்!!!

மொழி பற்று இல்லாதவனுக்கு தேசப்பற்று இராது என்பதை சங்கம் வைத்து தமிழ் வளர்த்து நிரூபித்தவன்!!!

உயிரால் மாண்டாலும் சொல்லாலும் செயலாலும் இன்றும் வாழ்பவர்கள் அவன் சான்றோர்கள்!!!

அவனின் எதிரியாக நண்பனாக இந்த பூமியில் இருந்து அவனையும் அவன் மொழியையும் சுவடே இல்லாமல் அழிக்க முயல்வது ஏனோ!!!

அயலவரிடம் இருந்து காக்கும் நிலை மாறி அண்மையில் இருப்பவரிடம் இருந்து அவனை காக்கும் நிலை வந்தது ஏனோ!!!

கடல் கடந்து வீரக்கொடி நட்ட அவன் முன்னோர்கள் வாழ்ந்த அவன் மண்ணில் இன்று அவனின் உரிமை போராட்டம் ஏனோ!!!

காவல் தெய்வமே காவலை கடந்து தமிழனாய் தன்னை மறந்து காலனாய் சூறையாடியது ஏனோ!!! கூடவே இருந்து அவன் முதுகில் குத்தும் இந்த துரோகம் ஏனோ!!!

சூழ்நிலையை ஆளும் அரசியல்!!!

ஆளுமை இல்லாத தலைவர்கள்!!!

தலைகுனியும் அதிகாரங்கள்!!!

இரக்கமின்றி அடிமைசாசனம் எழுதித் தந்த பதவிகள்!!!

அடிபணிந்து போகும் ஆளுமைகள்!!!

அன்றாட சாமானியனுக்கு இது ஒரு செய்தி!!!

கூடி விவாதிப்போருக்கு இது ஒரு தலைப்பு!!!

கேலி அரட்டை அடிப்போருக்கு இது ஒரு துணுக்கு!!!

பதவிக்காக பணத்துக்காக ஏலம் போவோருக்கு இது ஒரு அரசியல்!!!

பணக்காரனுக்கு இது ஒரு தொழில் யுக்தி!!!

பத்திரிகைக்காரனுக்கு இது ஒரு பக்க செய்தி!!!

ஆனால் யார் உணர்வர் இது அவனுக்கான போராட்டம் இல்லை தமிழனின் உரிமைக்கான தேடல் என்று!!!

யார் அறிவார்? தன் மண்ணிலே தன்னை அந்நியனாக்கும் தேசத்தில் தன் அடையாளத்தை நிலைநிறுத்தும் அறப்போராட்டம் இது என்று!!!

யார் சொல்வர்? அவன் சூழ்நிலையின் இயலாமையை அரசியலாகவும் பணமாகவும் மாற்ற நினைக்கும் வஞ்சகரிடத்தில் இருந்து தப்ப முனையும் ஆதரவு போராட்டம் என்று!!!

உலகின் ஆதியான அவனையும் அவன் மொழியையும் அந்தமாக்க நினையாதே!!! ஏனெனில் அவன் சீறியெழும் ஜல்லிக்கட்டு காளை!!!

தமிழ் மொழி மட்டுமல்ல தமிழனும் தனித்து இயங்கும் வல்லமை படைத்தவன்!!!

சசி.
 
Last edited:

banumathi jayaraman

அருமை, வெகு அருமை,
சசிதீரா டியர்
 
Devi29

Well-Known Member
kurivikalai sutuvathu pol suttu thirthachu........... vedhanaiyana nihalvu........
ஆனால் யார் உணர்வர் இது அவனுக்கான போராட்டம் இல்லை தமிழனின் உரிமைக்கான தேடல் என்று!!!
unmai
 
Rajesh Lingadurai

Active Member

அருமையான பதிவு. வாழ்த்துக்கள். இரக்கமில்லாத அரக்கர்கள் கையில் இருக்கும் அரிவாள், குழந்தையென்றும், குற்றவாளியென்றும் பேதமறியாது. பள்ளிப்பருவத்தைத் தாண்டாத ஒரு இளம்பெண்ணைக் கூட ஈவிரக்கமில்லாமல் கொல்வதற்குத் துணிந்த ஒரு அரசாங்கத்தின் கையில் இருக்கும் ஆட்சிக்கும், அரக்கர்கள் கையிலிருக்கும் அரிவாளுக்கும் ஒரு வேறுபாடும் கிடையாது.

பணத்தை வாரி இறைத்து ஆட்சியைப் பிடிக்கும் கயவர்கள் கூட்டம், பணத்துக்கு ஆசைப்படாமல் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது நமது பிழை. நமது வாக்குகளை வாங்கி ஆட்சியில் அமர்ந்து கொண்டு, அணில் அகர்வாலிடம் காசும் வாங்கிக்கொண்டு நம்மையே நெஞ்சில் சுடுகிறது இந்த இரக்கமற்ற வெறிநாய்க்கூட்டம்.

எதிரியிடம் கூட இரக்கத்தை எதிர்பார்க்கலாம், துரோகியிடம் துரோகத்தை மட்டுமே எதிர்பார்க்க முடியும். கயவர்கள் காசு கொடுத்ததும் போதும். நாம் காவு கொடுத்ததும் போதும். சாதி, மதம், பணம் கடந்து வாக்களிப்போம். கள்வர்களின் ஆட்சியை அகற்றுவோம். அப்போதுதான் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா அமைதியடையும்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top