Nam Thinasari Vaazhkkaiyin Oru Paguthi

Advertisement

Magizh Kuzhali

Writers Team
Tamil Novel Writer
முதலில் செய்தித்தாளை எடுத்தால் அதில் தேவையான விஷயத்தை விடுத்து கிசுகிசுவிற்கும் எந்த கட்சியிலடா சண்டை வரும் அதை போடலாம் அப்படியும் இல்லையென்றால் குத்துக்கொலை, கொள்ளை, இவள் கணவனை அவள் இழுத்துக்கொண்டாள் அவன் மனைவியை இவன் இழுத்துக்கொண்டு ஓடிவிட்டான் என்று இறப்பின் செய்தியை கூட வேடிக்கையாக என்று எரிச்சலூட்டும் வகையில் தலைப்புடன் நிரப்ப படுகின்றன.

அடுத்து தொலைக்காட்சியை போட்டுவிட்டு அமர்ந்தாள் உருப்படியாய் ஒன்றும் போடுவதில்லை அரைகுறை ஆடையுடன் பெண்களும் அசிங்கமாய் பேசி அதையும் காமெடி என்று கூறிக்கொண்டு நடிக்கும் காணொளிகளை காட்டுவது ஒருபுறம் சீரியல் என்ற பெயரில் ஒரு ஆண்மகனுக்காய் இரு பெண்கள் போட்டிபோடுவதும் நடைமுறைக்கு சாத்தியமே இல்லை என்னும் வகையும் பேய் பிசாசு என்று இணைத்து எதையோ ஓட விடுகின்றனர். ச்ச என்னடா இதுவென்று ஒளிவரிசையை மாற்றினால் இடையில் வரும் விளம்பரங்களோ நம் கலாச்சாரத்தை அழித்து பழக்கவழக்கங்களை மாற்றி அயல்நாட்டு தயாரிப்புகளை வாங்க சொல்லி பல் இளிக்கிறது.

எதுவும் தேவையில்லை என்று வெளியே வந்து அமர்ந்தாள் போய்வரும் இளைஞர்கள் ஒருபுறம் ஏதோ பெண்களையே பார்த்ததில்லை என்பது போல் ஒரு 'லுக்'வுடன் இக்காலத்து துச்சாதனனாய் மாறியிருக்க இன்னொருபுறம் பெண்கள் இவனை கழுட்டிவிட்டேனடி

இன்று நாளை அவனுடன் வெளியே செல்லவிருக்கிறேன் மாலை இன்னொருவனிடம் இந்த பொருட்கள் எல்லாம் வாங்கி தர சொல்ல வேண்டும் என்றும் கல்யாணமான சகோதரிகள் ஒருபக்கம் நேற்று பார்த்த சீரியல்களை இன்று சண்டை போட்ட எதிர்வீட்டுக்காரியின் ஒன்றுவிட்ட தங்கையின் ஒழுக்கத்தையே கேள்விக்குறியாக்கியபடியான ஒரு பேச்சுடன் தன் வீடு ஆள் பக்கத்துவீட்டு பெண்மணியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கிறான் என கவனிக்காமல் புரளியை ஈடுபட்டபடி.

கொடுமையடா என்று கைபேசியை திறந்து சமூக வளையதளத்தில் நுழைந்தால், என்றோ ஏதோ ஒரு நடிகையின் ஆபாச புகைப்படத்தை போட்டு மீம் என்று கேவலமாய் ஒரு வெறியுடன் புகைப்படங்கள்.

இந்த நாட்கள் போன வருடம் சமூக வளைத்தளமான முகப்புத்தகம் நம் நாட்டில் அனைவருக்கும் தெரிந்த விடயமாகா இல்லை. இன்றோ பியூட்டி முதல் பாட்டிவரை, பள்ளிச்சிறுவர்கள் முதல் பல்லில்லா தாத்தா வரை அனைவரும் முகப்புத்தகத்தில் இல்லாமல் இல்லை? என்ன காரணம்? ஒரு வகையில் மீம் கிரியேட்டர்ஸ் என்று நான் சொல்லுவேன்.

அதுவும் மீம் கிரேட்டர்களும் இந்த ஒரு வருடமாய் தான் பிரபலமாக ஆகிவிட்டார்கள். குடும்பத்திற்கு குடும்பம் இன்ஜினியரிங் என்பது போய் இப்போது குடும்பத்திற்கு குடும்பம் மீம் கிரேட்டர் என்றாகிவிட்டது. சரி எதனால் என்று பார்த்தால் வேடிக்கையான மீம்களில் தன் கற்பனையை புகுத்தி வேறு வேறு வகையான போஸ்ட்கள் போட்டு கவர்கிறார் என்றாலும் முதலில் இது எல்லா இடத்திற்கும் பரவியது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அதன் பின் ஆள் ஆளிற்கு நானும் மீம் கிரேட்டர் ஆவேன் என தங்களை இணைத்துக்கொண்டனர்.
சரி அது அவரவர் விருப்பம் என்று விட்டுவிடலாம்.

ஆனால் இப்போதைய சூழ்நிலையில் முன்பு சொன்ன செய்தித்தாளோ தொலைக்காட்சியோ எதுவும் மக்கள் அதிகநேரம் பார்ப்பதில்லை சமூகவலைத்தளமே வாழ்க்கையாகி போயிருக்கிறது. இங்கே சில நல்ல விஷயங்களையும் போடலாமே? மக்களாகிய நாமே இங்கு ராஜா மற்றும் ராணி. நமக்கு தெரிந்ததை மற்றவருக்கு சொல்கிறோம்.

இதில் யாருமே கண்டுக்கொள்ளாத ஆபாசங்களை கூட முக்கியமாய் கவனித்து திரையாகி அதை மேலும் என்னயிருக்கிறது என விலாவரியாக போடும் சிலர். (சிறிது நாட்கள்முன் சாதாரணமான ஒரு தளபக்கத்தில் ஜூலியின் புகைப்படத்தை போட்டிருந்தனர் அவள் என்னவோ செய்து எப்படியோ வாழட்டும் அதை விமர்சிக்கும் உரிமை நமக்கில்லையே?)

முதலில் எல்லாம் கெட்டவார்த்தையை சாதாரணமாய் உபயோகப்படுத்தவே யோசிப்போம் இப்போதோ பொது வளப்பக்கங்களில் கூட இதெல்லாம் சகஜம் என்பதுபோன்ற ஒரு பதிவுகள்.

விவசாயிகளே நம் ரத்தம்
மீனவர்களே நரம்புகள்
தமிழே மூச்சு
அரசியலில் மாற்றத்தை கொண்டுவருவோம்
எங்கு பிரச்சனை என்றாலும் உண்மையின் பக்கம் நிற்போம்
அனைத்து விஷயங்களையும் மக்களிடம் கொண்டுசெல்வோம்

இப்படி பல பல உறுதிமொழிகள் ஒரு வருடத்திற்குமுன் இப்போது எங்கே போனது? கேட்டால் இப்போதெல்லாம் அதற்கான ஆதரவு கம்மி, 'லைக்' 'ஷேர்' அதிகமாய் கிடைப்பதில்லை என்ற கூற்றுடன் தப்பித்துக்கொள்கின்றனர்.'
எனக்கு ஒரே ஒரு கேள்வி மட்டும் தான்.

இந்த இந்த விஷயங்களுக்கு தான் 'ரீச்' அதிகமாய் கிடைக்கும் என விலகிக்கொள்ளும் வளப்பக்க நிர்வாகிகளே உங்களுக்கும் நீங்கள் விமர்சித்த காசுக்காக விலைபோகிவிட்டனர் என்று கூறிய அரசியல்வாதிகளும் 'டிஆர்பி'காக விலைபோன செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விட்டதே?

அவர்களுக்கு ஒரு விலை இருப்பதுபோல் உங்களுக்கும் 'லைக்' 'ஷேர்' என்ற விலை விதித்துவிட்டீர்களா?

இப்படியெல்லாம் கேள்வி எழுப்பினால் உங்களுக்கு என்னமா பிரச்சனை என்று கேள்வி ஒருபுறம், ஆமாம் இவங்கதான் நாட்டை காப்பாத்தப்போறாங்க என்ற எகத்தாளம் ஒருபுறம், நீமட்டும் என்னத்தை கிழித்துவிட்டாய் என்ற கெக்கலிப்பு ஒருபுறம் என்று அவரவருக்கு தாக்கப்படியான வாயை அடைக்கும் வரிகளுடன்.

மறதி ஒரு வியாதியென்றால்
நமக்கு நாமே வைரஸ்ஸாக

எப்படியோ தானும் உறுப்பிடமாட்டேன் மற்றவர்களையும் உறுப்பிடவிடமாட்டேன் என்று வாழ்கிறோமோ என்று சந்தேகத்துடன் விடைபெறுகிறேன்.

குறிப்பு: நான் சொல்லுவது தவறு செய்தவர்களுக்கு மட்டுமே கோவம் வரும், ஹெஹெஹெ.

நன்றி...!!!
 

Joher

Well-Known Member
yea joher... and its a sad truth :(

Yes..... உண்மை சுடும்......

பெண்களை ஆண்கள் காட்டுவது ஒரு வகை என்றால் பெண்களை அவர்களே காட்டி கொள்வது ???????

Recent ஆ ஒரு பிறந்தநாள் போட்டோ fb ல நிறைய பேர் பார்திருப்பார்கள்......

ஆண்கள் கூட போட்டோ போடும் முன் check பண்ணுங்கன்னு comment போட்டிருந்தார்கள்.....
 

Manimegalai

Well-Known Member
ரொம்ப உண்மையான மனக்குமுறல்..
நீ...என்ன செஞ்ச...
பேச மட்டும்தான செய்த என்று
எதற்கெடுத்தாலும் விமர்சனம்
வருவதும்உண்மை...
சில விவசாயம் சார்ந்து நல்ல மீம்ஸ் போடுபவர்களும் உண்டு...
மீனவர்கள் பிரச்சனையின் போதும்...
என்ன செய்ய தீர்வுதான் தெரியல..
 

Joher

Well-Known Member
ரொம்ப உண்மையான மனக்குமுறல்..
நீ...என்ன செஞ்ச...
பேச மட்டும்தான செய்த என்று
எதற்கெடுத்தாலும் விமர்சனம்
வருவதும்உண்மை...
சில விவசாயம் சார்ந்து நல்ல மீம்ஸ் போடுபவர்களும் உண்டு...
மீனவர்கள் பிரச்சனையின் போதும்...
என்ன செய்ய தீர்வுதான் தெரியல..

Popularity.....
Publicity.....
இது தான்......
இறங்கி வேலை செய்ய யாரும் தயாரில்லை.......

செய்ற சிலபெரும் காசுக்கும் மிரட்டலுக்கும் விலை போய்விடுகிறார்கள்.......

யார் தான் உன்னை மீட்ட......
வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழிகாட்ட.....
 

Adhirith

Well-Known Member
Yes ....very much true....
Quantity plays a more important
role than Quality.....

Largest circulation....
highest TRP.....
the no of views....
the no. Of likes....
தரம் என்பதே எண்ணிக்கையை
வைத்து மதிப்பிடப் படுகிறது...
தரம் தன் அர்த்தத்தை இழந்து நிற்கிறது....:oops:

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top