உன் நிழல் நான் தாெட final (2)

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
அந்த இரவு நகரின் முக்கிய இடத்தில் இருந்த அந்த மண்டபம் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நிரம்பி வழிந்தது. மேடையில் நின்று கொண்டிருந்த பிரபு தனது பக்கத்திலிருந்த அபிராமியை பார்வைகளால் விழுங்கிக் கொண்டிருந்தான்.

அபிராமி பிரபுவின் தூரத்து உறவு பெண் சிறுவயதிலிருந்தே அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவள் பின்னாலேயே ஜொள்ளு விட்டுக் கொண்டு திரிபவன் இப்பொழுது சும்மாவா இருப்பான்.

நாளை அதிகாலையில் தன் மனைவியாக வர போகிறவளை முழு உரிமையுடன் சைட் அடித்துக் கொண்டிருந்தான். பிரபுவின் பார்வையை உணர்ந்து தலை நிமிர்ந்து பார்க்காமல் வெட்கத்தால் அபிராமி தலை குனிந்து நின்றாள்.

சுற்றியிருந்த அனைத்து நண்பர்களும் பிரபுவை கேலி செய்ய பிரபு எதையும் கண்டுகொள்ளாமல் தன் (சைட் அடிக்கும்) வேலையை தொடர்ந்து செய்தான். பிரபுவின் அருகில் மாப்பிள்ளைத் தோழனாக அஜீத் அவனுடன் அர்ஜுன் நிற்க, அபிநயாவின் மணப்பெண் தோழியாக ரத்னாவும் அவளருகில் ஆராதனாவும் நின்றுகொண்டிருந்தாள்.

நண்பர்கள் ஒவ்வொருவராக பரிசை கொடுத்து கீழே செல்ல அப்பொழுது ஸ்டெல்லா தனது கணவன் டேனியல் மற்றும் தனது ஒரு வயது குழந்தை பிரின்சியுடன் மேடைக்கு வந்தாள். மணமக்களை வாழ்த்தி பரிசளித்துவிட்டு கீழே செல்லும் பொழுது ரத்னாவை ஒருநிமிடம் பார்த்து

"சாரி." என்று மட்டும் கூறிவிட்டு கணவன் மற்றும் தன் மகளுடன் மண்டபத்தை விட்டு வெளியேறினாள்.

அன்று தன் பேச்சை கேட்காமல் தந்தை ரத்னாவுக்கு உதவுவதால் கோபம்கொண்ட ஸ்டெல்லா கத்தியால் தன் கைகளை கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றாள். ஆனால் சரியான நேரத்தில் வீட்டின் வேலையாட்கள் பார்த்ததால் உயிர்த்தாள்.

அதன் பிறகு வந்த நாட்களில் ராபட் தன்மகள் அருகிலேயே இருந்து கவனித்துக்கொள்ள எஸ்டெல்லா மனதில் அஜீத்திற்காக இருந்த இடம் காணாமல் போனது.

பின்பு தான் செய்த தவறை ஸ்டெல்லா புரிந்து கொண்டாலும் மன்னிப்பு கேட்பதற்காக கூட அஜீத் ரத்னா வாழ்வில் மீண்டும் வர விரும்பவில்லை.

பிஎட் படித்து முடித்ததும் வேலைக்கு செல்ல விரும்ப ராபர்ட் ஒரு பள்ளியை விலைக்கு வாங்க தயாராக இருந்தார். அனைத்தையும் மறுத்துவிட்டு தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தாள்.

அந்த பள்ளியின் தாளாளர் மகன் டேனியல் நாட்கள் செல்ல இருவரின் இடையிலும் நல்ல காதல் மலர்ந்தது. ஸ்டெல்லா தன் வாழ்வில் நடந்த எதையும் டேனியலிடம் மறைக்கவில்லை.

அனைத்தையும் புரிந்து கொண்டு ஸ்டெல்லாவை முழுமனதுடன் டேனியல் ஏற்றுக்கொண்டான். இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் நல்லபடி நடந்தேறியது.

மண்டபத்தை விட்டு சென்ற ஸ்டெல்லாவை விழி அகற்றாமல் ரத்னா பார்த்துக்கொண்டிருக்க அவள் மனதில் மனதில் கடந்தகாலம் ஞாபகங்கள் வந்து சென்றது.

ஸ்டெல்லா வந்து சென்றதும் ரத்னா மற்றும் அஜீத் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த பிரபு அருகில் இருந்த தன் மற்ற நபர்களிடம்

"டேய் போதும்டா என்ன எவ்வளவு நேரம்தான் கிண்டல் பண்ணிக்கிட்டு இருப்பீங்க. உங்களுக்கு இவனோட லவ் ஸ்டோரி தெரியுமா." என பிரபு கூற அதில் ஆர்வம் ஆகிய மற்றவர்கள் கவனிக்க தயாராக நின்றனர். அனைவரின் முகத்தில் இருந்த உற்சாகம் அஜீத் ரத்னாவின் கவனத்தை பிரபுவிடம் திருப்பியது.

"ஒருநாள் இவங்க ரெண்டு பேரும் ஹாஸ்பிடல்ல பேசிக்கிட்டு இருக்கிற நான் பார்த்தேன் அப்போ நான் என்ன நினைச்சேன் தெரியுமா ஆஆஆஆ...." என ராகம் போட்டு பேச அருகில் இருந்த நண்பர்கள்

"என்ன நெனச்ச."

"இவன் பாேகின்ற வேகத்த பாத்த 3 வருட படிப்பு முடிஞ்சு பட்டம் வாங்குறதுக்கு முன்னாடி கல்யாணத்தையே முடிச்சுருவான்னு பாேல நினைச்சேன். இவனும் அதே மாதிரி பட்டம் வாங்குறதுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னேயே ரத்னாவை கல்யாணம் பண்ணிகிட்டான். அதுமட்டுமா....."

"வேற என்னடா..." என ஆர்வமாக கதையில் ஒன்றி மற்றவர்கள் கேட்க

"ஆத்தா நான் ஐஏஎஸ் ஆயிட்டேன் அப்படின்னு சொல்லுவன்னு பார்த்தா, இவன் நான் அப்பாவாகிட்டேன்னு சொல்றான்." என பெருமூச்சு விட கூடியிருந்த நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சிரித்தனர்.

"அவ்வளவுதானா வேற எதுவும் இருக்கா." என அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அபிநயா கேட்க, பிரபு ஒரு நிமிடம் அபிநயாவை காதலாக பார்க்க அருகில் இருந்த நண்பர்கள்

"டேய் கதைய முழுசா சொல்லி முடி."

"நிம்மதியா சைட் அடிக்க விட மாட்டீங்களே, சொல்றேன் சொல்றேன் சார் அப்போ சப் கலெக்டராக இருந்தார். அவருக்கு அப்பாே கலெக்டர் பிரமோஷன் கிடைச்சுச்சு அதுக்காக நான் வாழ்த்து சொல்ல அவங்க வீட்டுக்கு போனேன். அப்பதான் தெரிஞ்சுச்சு இன்னும் ஆறு மாசத்துல ஆராதனா பாப்பா வரப்போறான்." என பெருமூச்சு விட அருகில் இருந்த அஜீத் அவன் முதுகில் அடித்து

"இதுல உனக்கு ரெம்ப வருத்தம் பாேல."

"வருத்தம் எல்லாம் ஒன்னுமில்ல, நானும் இதோ பக்கத்துல இருக்கிறாளே இவளை பத்தாவது படிக்கும்போதுலிருந்து லவ் பண்றேன். எங்க வீட்டுல உள்ளவங்க புரிஞ்சுகிட்டு எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கவே 13 வருஷம் ஆகி இருக்கு. அத நெனச்சா தான் மச்சி கொஞ்சம் பீலிங்."

பொறுத்து பொறுத்து பார்த்த ரத்னா இப்போதைக்கு பிரபு தன் பேச்சை நிறுத்த போவதில்லை என்பதை உணர்ந்து

"டேய் பிரபு ஓவர் பீலிங் உடம்புக்கு ஆகாது." என கூற பிரபு

"ரத்னா இன்னைக்கு நான்தான் மாப்பிள்ளை அதனால நீ என்ன மரியாதையா கூப்பிடனும், அதை நல்லா ஞாபகம் வச்சுக்கோ."

"ஓ நல்ல ஞாபக வைச்சிருக்கிறேனே, எனக்கு இப்போ என்ன ஞாபகம் வருது நாம பைனல் இயர் படிக்கும்போது ஃபர்ஸ்ட் இயர் மேக்ஸ் டிபார்ட்மெண்ட் மீரா பின்னாடி நீ சுத்துனதான. அந்த மீரா அதோ அங்க வர பாரு." என கூற அதுவரை வெட்கப்பட்டு சிவந்த அபிராமியின் முகம் கோபத்தால் சிவந்து இருந்தது.

பல்வேறு வகையில் முயற்சித்து பிரபு அபிநயாவை சமாதானம் செய்து அடுத்த நாள் காலை அபிராமியின் கழுத்தில் மங்கல நாண் பூட்டி தன் சரிபாதி ஆக்கிக் கொண்டான். இப்பொழுது அபிநயாவின் முகத்தில் கோபம் மறைந்து வெட்கம் மட்டுமே நிலைத்து இருந்தது.

அனைத்து சடங்குகளும் முடிந்து இரவு வீடு வந்த வந்ததும் மைதிலி பேரப் பிள்ளைகள் இருவரையும் தங்களுடன் தூங்க வைத்துக் கொள்வதாக சொல்லி அழைத்துச் சென்றுவிட, ரத்னா தங்களது அறைக்குள் நுழைந்தாள்.

ரத்னா உள்ளே வந்ததும் அவனது கையை பற்றி இழுத்த அஜீத்தின் மீது பூவென விழுந்தவளை இறுக அணைத்துக் கொண்டான். அவள் காதுகளில்

"ரத்னா ஆர் யூ ஹேப்பி." எனக்கேட்க விலகி எழுந்து ரத்னா

"அத நீ இன்னும் ரெண்டு பிள்ளைங்க பெத்ததுக்கு அப்புறம் கேட்டு இருக்கலாம்."

"ஓகே." என ஒற்றை வார்த்தையில் அஜீத் பதிலளிக்க

"என்ன ஓகே."

"இன்னும் ரெண்டு பிள்ளைங்க பெத்துக்க எனக்கு ஓகே." என கூறி ரத்னாவை தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான்.

இனி அஜீத் சந்திரன் ரத்னாவதி வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே. இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்தி விடை பெறுவோம்.

♥-♥-♥-♥-♥- முற்றும் -♥-♥-♥-♥-♥
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top