Advertisement

        
                                                  அத்யாயம் — 16
      ‘மாமா..  அத்தை  அழகாயிருப்பாங்களா..?” என்று  நந்தினியின்    மகள்  ரகுவை  கேட்டாள்.
      ‘அந்த  கிரீன்  கலர்  சாரியில  இருக்காயில்ல  அவதான்  உன்  அத்தை..‚  நீ  போய்…  அவகிட்ட  உங்க  அத்தை  உங்களை  கூப்பிட்டாங்கன்னு  கூட்டிட்டுவா..” என்றனுப்பினான்.
     ‘அத்தை…  உங்கத்தை  கூப்பிட்டாங்க” என்று  சுசிலாவை  காண்பித்தாள்.
     ‘உன்  பேரென்ன..?  எத்தனாவது படிக்கிற..?” என்று  அவளிடம்  கேட்டுக்கொண்டே  வந்தாள்.
     ‘என்பேர்..  நிஷா  நான்   ஆறாவது  படிக்கிறேன்..” என்றாள்.
     ‘கூப்பிட்டிங்களா..?” என்று   சுசிலாவைப்   பார்த்து  பார்வதி  கேட்க.. ‘மாமாதான்  அப்படி  சொல்லி  உங்களை  கூட்டிட்டு  வரசொன்னாங்க..” என்று  ரகுவை  காண்பித்தாள்.
     ரகு  யாருடனோ..  ‘ம்ம்.   நான்  ரகுதான் பேசறேன்..  அப்படிங்களா..?  என்தம்பி..  ராஜா  பேர்லதான்  புக்  பண்ணியிருந்தேன்..‚  இப்ப  கொஞ்சம்  பிசியா இருக்கோம்  ஒரு  இரண்டு  மணிக்கு  மேலவந்து  நாங்க  எடுத்துக்கிறோம்..”  என்று   சொல்லிக்கொண்டிருந்தான்.
     ‘இவ  நந்தினியோட  பொண்ணும்மா  ரகுகிட்ட..  என்  அத்தை  யாருன்னு  கேட்டா  அதுக்குத்தான்  ரகு  உன்னை  காட்டி  கூட்டிட்டு  வரசொன்னான்.” என்றார்  சுசிலா.
     உடனே  அருகில்   இருந்த     நாற்காலியில்  உக்கார்ந்தவள்..  நிஷாவையும்  பக்கத்தில்  உக்காரவைத்து   ‘நீ  எத்தனாவது  ரேன்ங்க்  வாங்குவ..?”என்றாள்.
    ‘நான்  தேர்ட்  ரேங்க்குள்ள  வாங்குவேன்.. “
    ‘சூப்பர்.. “  என்றாள்.
    ‘ஆனா  அம்மா  அதுக்கே  திட்டுவாங்க..” என்றாள்.
    ‘அப்படின்னா  அம்மா  திட்டாத  மாதிரி  மார்க்  வாங்கு   அவங்க   உன்  நல்லதுக்குதான்  திட்டுவாங்க..  உன்னால  கண்டிப்பா  முடியும்..‚“ என்றாள்.
    ‘தேங்க்ஸ்  அத்தை..   எனக்கு  உங்களை  ரொம்ப  பிடிச்சிருக்கு..” என்றாள்.
    ‘எனக்கும்தான்  உன்னை  ரொம்ப  பிடிச்சிருக்கு..” என்று  பார்வதியும்  சொன்னாள்.
    ‘பார்வதி..  நீ கலையரசி  மீனா  துளசி  எல்லாரும்  கிளம்பி  வீட்டுக்கு  போங்க  பின்னாடியே  பொண்ணு  மாப்பிள்ளையை  கூட்டிட்டு  நாங்க  வந்திடறோம்..”  என்றார்  தம்பிதுரை.
      ‘நானும்  உங்ககூடவே  வரேன்..” என்று  நிஷா  பார்வதியிடம்  சொன்னாள்.
      ‘அம்மாகிட்ட  போய்  பர்மிசன்  கேட்டுட்டுவா..  அவங்க  ஓ.கே  சொன்னாதான்  எங்கன்னாலும்   யார்கூடன்னாலும  போகனும்..” என்றாள்.
      பார்வதியை  ஆச்சர்யமாய்  பார்த்துக்கொண்டிருந்த   நந்தினி..  ‘போய்ட்டு   வா..” என்று  தன் மகளிடம்  சம்மதம்  தெரிவித்தாள். 
      ‘ராஜா..  இங்கவா..” என்றழைத்தான்   ரகு.   அவன்  வந்ததும்  ‘ஷோ  ரூம்ல  இருந்து  கால்  பண்ணாங்க..  கார்  ரெடியா   இருக்காம்..  நீ  போய்  கொஞ்சம்  எடுத்திட்டு  வந்திடுறியா..?  இன்னைக்கே   எடுத்திட்டு  வந்திட்டா..   சுகுனாவை  விவேக்  வீட்டிற்கு  புதுகார்லயே  அனுப்பி  வச்சிடலாம்..” என்றான்.
      ‘சரி  ரகு  நான்  போய்  எடுத்திட்டு  வந்திடறேன்..”
      ‘யார்கிட்டையும்  சொல்லாம  போடா  சர்ப்ரைசா  இருக்கட்டும்  முடிஞ்சா  விவேக்  சுகுனான்னு  பேர்போட்டு  எடுத்திட்டு  வா..” என்றான். 
     தம்பிதுரை  வீட்டிற்கு  வந்ததும்..   மணமக்களுக்கு  பால்  பழம்  கொடுத்து  ‘கொஞ்ச  நேரம்  ரெஸ்ட்  எடுங்க..” என்று  சுகுனாவின்  அறையை  காண்பித்தார்  துரை.  ‘ரகு..  மாடிரூம்ல  நீயும்  பார்வதியும்  கொஞ்ச  நேரம்  படுங்க  பார்வதி  அப்பவே  டையர்டா  இருக்குன்னு  சொன்னா..” என்று  அவர்களை  அனுப்பி  வைத்தார்.
       மேலே  ரூமிற்கு  வந்ததும்  அங்கிருந்த  கட்டிலில்  பார்வதி  படுத்துக்கொண்டாள்.  கதவை  சாத்தி தாழ்போடாமல்..  அவளருகில்  உக்கார்ந்து  அவளை  தூக்கி  தன்  மடிமீது  போட்டுக்கொண்டான்.  அவள்  விலகப்பார்க்கவும்    ‘ம்ச்ச்..  பேசாம  தூங்கு..”  என்று  பார்வதியின்  தலையை  நீவி  முதுகில்  தட்டிக்கொடுத்தான்.  நீண்ட  நாட்களுக்கு  பிறகு  கிடைத்த  தாயின்  பாசம்போல்  உணர்ந்த  பார்வதிக்கு  தானாக  அழுகை  முட்டியது.  ரகுவின்  கால்களை  சேர்த்து  கட்டிக்கொண்டாள்.  சற்று  நேரம்  கழித்து..   ரகுவின்  எண்ணம்  உணர்ந்து அவனை  விட்டு  நகர்ந்தவள்..  ‘போய்  கதவை   தாழ் போட்டுட்டு  வாங்க..” என்றாள்.
    ‘அதெல்லாம்  வேணாம்..   நீ  பேசாம  தூங்கு..” என்றான்.
    ‘சபதமெல்லாம்  நான்  மட்டும்தான்  எடுக்கனும்  நீங்கெல்லாம்  எடுக்கக்கூடாது..‚” என்றாள்.
    ‘நான்  ஒரு  சபதமும்  எடுக்கலை  அந்த   காண்ட்ராக்டை  நீயே  வச்சிக்கோ  நீ  ரொம்ப  டையார்டா  இருக்க  வாயடிக்காம  முதல்ல  தூங்கு..” என்றான்.
     ரகுவின்  அருகாமையில்  பார்வதி..  கண்மூடிய  உடன்  தூங்கிப்போனாள்.  ரகுவிற்குத்தான்  தூக்கமே  வரவில்லை  எப்படி  எல்லாம்  நினைத்துவிட்டாள்  என்று  யோசித்துக்கொண்டிருந்தான்.  மாலை  நான்கு  மணிக்குமேல்  பார்வதி  எழுந்திரிக்கவும்..  இருவரும்  கீழே  வந்தார்கள்.
      எல்லோரும்  சுகுனாவை  சமாதானப்படுத்திக்கொண்டிருக்க..  அவள்  அழுதுகொண்டேதான்  இருந்தாள்.   ரகு  வருவதைப்  பார்த்ததும்  ‘மாமா.. “ என்று  ரகுவிடம்  போய்  நின்றாள்.
     ‘இப்ப  எதுக்கு  நீ  இப்படி  அழுதிட்டு  இருக்க..?  நம்ம  நந்தினி  அக்கா  இங்கயிருந்து  அங்க  போய்  இருக்கலையா..?  நீ  இப்படி  அழுதா  விவேக்குக்கு   கஷ்டமா  இருக்காதா..?” என்று   ரகு  திட்டவும்..  சுகுனாவிற்கு  அழுகை  கப்பென்று  நின்றது.
     ‘ராஜா..  கார் சாவியை  அப்பாகிட்ட  கொடு  அவர்  கொடுக்கட்டும்..” என்றான்.
     சுந்தரம்..  கார் சாவியை  விவேக்கிடம்  கொடுக்க..  ‘ரகு..  என்னை  கேக்காம  எதுக்கு  இதையெல்லாம்  வாங்குனிங்க..?  ப்ளீஸ்  வேண்டாம்.  என்கிட்ட  இருக்கிற  பைக்கே  எனக்கு  போதும்..” என்றான்.
    ‘விவேக்..  உங்க  பெரியப்பாக்கு  வருமானம்  இல்லைங்கிறதால..  படிக்கிற  வயசிலயே..  உங்க  சொத்தையும்  சேர்த்து  அவங்களுக்கே  கொடுத்திருக்கிங்க   உங்க  பெரியப்பா  வேண்டாம்னு  சொன்னதுக்கு..  உங்க  இரண்டு  பொண்ணுங்களும் என் தங்கச்சிங்கதான..?   இதை  அவங்களுக்காக   வாங்கிக்கோங்க..  நான்  எப்படின்னாலும்  சம்பாரிச்சி  இன்னும்   நிறைய  வாங்குவேன்னு..   சொல்லியிருக்கிங்க..‚  உங்க  சொத்தையே   நீங்க  பெருசா  நினைக்காத  போது..  நீங்க  இப்படி  எதிர்பார்க்க  மாட்டிங்கன்னு  எனக்கு  தெரியாதா..?  இதை  சுகுனாவுக்காக  நாங்க  கொடுக்கல..”  என்று   நிறுத்தியவன்..  தன்  அப்பாவை  ஒரு  நிமிடம்  பார்த்து   பிறகு  விவேக்கிடம்…
     ‘சுகுனாமேல  நீ   விருப்பப்பட்டும்..  அவ  உன்னை  காதலிக்கலைன்னாலும்..  உன்னோட  காதல்  மேல  நம்பிக்கை  வச்சிதான  நீ  அமெரிக்காவுக்கு  போன..?  அங்க  போயும்..  நீ  அவளை  கண்காணிச்சிட்டு  இருந்ததாலதான  அவளுக்கு  நிச்சயமாய்டுச்சின்னு  உனக்கு  தெரிய  வந்தது.  ஆனாலும்  விடாம  சுகுனாக்காகவே    அமெரிக்காவில  இருந்து  வந்து    உரிமையா..  அவகிட்ட  சண்டை  போட்ட  பாரு..  அந்த   உண்மையான  காதலுக்காகத்தான்  இந்த  பரிசு.  எங்க  சுகுனாக்கு  உன்னை  மாதிரி  ஒரு  புருசன்  கிடைச்சதுக்கு..   நாங்க  வெளிப்படுத்துற  சந்தோசம்தான்  இது.  வாங்கிக்கோ..” என்றான்.
      விவேக்  எதுவும்  சொல்லமுடியாதவனாய்  வாங்கிக்கொண்டான்.  ‘மாமா..  எனக்கு  எதுவுமில்லையா..?” என்றாள்  சுகுனா.
      ‘விவேக்..  உன்னை  சந்தோசமா  பார்த்துக்குவான்னு  எனக்கு  நம்பிக்கை  இருக்கு..  அதனால  விவேக்குக்கு   வாங்கி  தந்தேன்.‚  ஆனா..  நீ விவேக்கை  சந்தோசமா  பார்த்துக்குவேன்னு  எனக்கு  நம்பிக்கையில்லை   உன்  அழுமூஞ்சே   அதை  சொல்லுது..   நீ  உன்  புருசனை  சந்தோசமா  பார்த்துக்குவன்னு   எனக்கு  எப்ப  நம்பிக்கை  வருதோ  அப்ப  வாங்கிதரேன்..”  என்றான்.
      விவேக்கிடம்.. ‘நான்  உன்னை  சந்தோசமாத்தான   பார்த்துகிட்டேன் இப்பகூட..”  என்று   ஆரம்பித்தவளை  இடைமறித்து.. ‘அம்மா  தாயே..  நீ  என்னை ரொம்ப சந்தோசமாத்தான்  பார்த்துக்கிற..  நான்  ஒத்துக்கிறேன்   உனக்கு  எதுன்னாலும்  நான்  வாங்கி தரேன்..  கொஞ்சம்  வாய  மூடிகிட்டு  கார்ல  போய்  உக்காரு..” என்று  மிரட்டினான்.   அணைவரும்  சிரிக்க.. 
     ‘எங்க  மாமா  முன்னாடியே  என்னை  இப்படி  மிரட்டுற..?   ஆனாலும்.. உன்னைப்போய்  நம்பறாங்க  பாரு..” என்று  கோபமாக  காரில்  போய்  உக்கார்ந்தாள்.
    ‘அதான..?  நீ  எதுக்கு  விவேக்  சுகுனாவை  பேசவிடாம  இப்படி  மிரட்டுற..?  சுகுனா..  நீ  சொல்ல வந்ததை  எனக்கு   போன்ல  சொல்லு..  நான்  இருக்கேன்  உனக்கு..‚  விவேக்கை  உண்டு   இல்லன்னு  பண்ணிடறேன்இ  நீ  தைரியமா  போ..” என்று  ராஜா  சொல்லி  சிரித்தான்.
     ரகுவும்  சிரித்து  ‘டேய்..  அறிவுகெட்டவனே  உன்  வாய  முதல்ல  மூடு.‚” என்றான்.
     ‘அப்படியே  ஆகட்டும்  அண்ணா..”  என்று..  ஒரு  கையை  மடக்கி..  தலைகுனிந்து  சிரித்தவாறே   சொன்னான்  ராஜா.

Advertisement