Advertisement

எட்வின் ஆதனைப் பார்த்துப் பேசியதும் சாமிக்கண்ணுவை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு அவன் சென்ற இடம் தேவிகாவின் வீட்டிற்குத் தான்.

தேவிகா ஏதோ டீல் விஷயமாக ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எட்வின் உள்ளே வர, அவனை அங்கேயே நிற்கச் சொல்லி சைகையால் சொல்லிவிட்டு அவரது அறைக்குச் சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்துத் தான் அவர் அவரது அறையிலிருந்து வெளியே வந்தார். அப்போதும் எட்வின் அவர் கூறிய இடத்திலே நின்றிருப்பதைப் பார்த்தார். கண்களில் மெச்சுதலுடன் அவனிடம் சென்றவர்,”வா எட்வின். என்ன விஷயம்?”

“மேடம் ரம்யா கேஸை கமிஷ்னர் க்ளோஸ் பண்ணச் சொல்லிட்டார். அது மட்டுமில்லாம அவர் ஆதன் விசாரணைல தலையிட மாட்டேன்னு சொல்லிட்டார். அதனால இப்போ ஆதன் உள்ள போறது உறுதியாகிடுச்சு மேடம். அதைச் சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்.” என்று எட்வின் கூறவும், தேவிகா அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

“ரொம்ப ரொம்ப நன்றி எட்வின். உன்னால தான் இன்னைக்கு நான் இந்தப் பிரச்சனைல இருந்து வெளி வந்துருக்கேன். உனக்கு என்ன வேணும்னு சொல்லு.”

“எனக்கு எதுவும் வேண்டாம் மேடம். உங்களோட ஆசீர்வாதம் இருந்தாலே போதும் மேடம்.” என்று கூற, அதைக் கேட்ட தேவிகா புலாகிதம் அடைந்தார்.

“உனக்கு என்னோட ஆசீர்வாதம் எப்போவும் இருக்கும் எட்வின். வேற என்ன வேணும்னு சொல்லு.” என்று கேட்டார்.

“இல்லை மேடம் வேற எதுவும் இப்போதைக்கு வேண்டாம். அப்படி வேணும்னா நான் கண்டிப்பா உங்ககிட்ட கேட்கிறேன் மேடம்.” என்றான் எட்வின்.

“ம் ஓகே எட்வின். உன்னை மாதிரி ஒருத்தன் என் கூட இருந்தால் போதும் எதையும் நான் சாதிச்சுடுவேன். அதனால எப்போ எந்த உதவினாலும் தயங்காமல் கேள்.” என்றார் தேவிகா.

“கண்டிப்பா மேடம். இதைச் சொல்ல தான் நான் வந்தேன் மேடம். அப்போ நான் கிளம்புறேன்.” என்று கூறிவிட்டு எட்வின் அங்கிருந்து கிளம்பி விட்டான்.

~~~~~~~~~~

சாத்விகா சென்ற தினம், ஆதன் எதையும் செய்யாமல் அமைதியாக நாள்ளை கடத்தினான். அவனுக்கு ஒரு பக்கம் பயம் இன்னொரு பக்கம் கொஞ்சம் தைரியம் இருந்தது சாத்விகா சமாளித்து விடுவாள் என்று. அவளை அவன் முதலில் பெண் என்று சாதாரணமாகத் தான் எடை போட்டிருந்தான். ஆனால் அவள் தற்காப்புக் கலை அனைத்தையும் பயின்று இருந்தாள். அதனால் தான் அவளை அவன் செல்லவே அனுமதித்தான்.

ஆதனிற்கு இன்னும் மூன்று நாட்களில் அவன் மேல் உள்ள வழக்கை விசாரிக்க உள்ளனர். அதில் அவனுக்கு எந்தத் தீர்ப்பும் வரலாம். அது சாதகமாகவும் இருக்கலாம், பாதகமாகவும் இருக்கலாம். ஆனால் அவனுக்கு இப்போது அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. அவன் உள்ளே சென்று விட்டால் சாத்விகா பற்றி எதுவும் தெரிந்து கொள்ள முடியாது என்ற கவலை தான் அவனை இப்போது ஆட்டுவித்தது.

ஆனால் அந்தக் கவலைக்கு வேலையே இருக்கப் போகாமல் போக சாத்விகா அவள் செல்லும் முன்னரே தனது நண்பர்களிடம் சொல்லிவிட்டுத் தான் சென்றிருந்தாள்.

ஆதன் பற்றிய செய்திகளை மக்கள் மனதில் ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தால் தான் விசாரணை கமிஷனில் இருப்பவர்கள் யோசிப்பார்கள். அப்படி மக்கள் இதைப் பற்றிப் பேசாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால் ஒரு ஒருவாரம் ஆதன் பற்றித் தான் அனைவரும் பேசும் படிச் செய்ய வேண்டுமெனக் கூறிவிட்டுச் சென்றிருந்தாள்.

சாத்விகா கூறியதை வைத்தே சக்தி, பிரபு, ரவி மற்றும் ஜெசிக்கா அவர்களது நண்பர்களிடம், உறவினர்களிடம், அவர்களது நண்பர்கள் எனப் பெரும் படையைத் திரட்டி, அனைவரையும் ஸோசியல் மீடியாவில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு ட்ரென்ட் செய்ய, சிறிது நாட்களுக்கு விசாரணையைத் தள்ளி வைக்க கமிஷன் முடிவு செய்தது.

இதை எதிர்பாராத ஆதன் மிகவும் மகிழ்ந்தான் என்று தான் கூற வேண்டும். சாத்விகாவை நினைத்து அவளது புத்திக் கூர்மையை நினைத்து அவனால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதே போல் அவள் மேல் உள்ள காதலின் அளவும் கூடிக் கொண்டே சென்றது.

“ஏய் சாத்விகா நீ என்னை இவ்ளோ லவ் பண்றனு எனக்குத் தெரியவே இல்லை. நான் தான் உன்னை ரொம்ப லவ் பண்றேன்னு நினைச்சேன். ஆனால் நீ என்னோட லவ் ரொம்ப சாதாரணமானது நிரூபிச்சுட்ட. ஐ லவ் யூ டா பேபிமா.” என்று அவளுடன் எடுத்த புகைப்படத்தைப் பார்த்துப் பேசினான் ஆதன்.

~~~~~~~~~~

சாத்விகா அங்கு வேலைச் சேர்ந்து இத்தோடு ஐந்து நாட்களாகி விட்டது. அவளால் எதிர்பார்த்த மாதிரி எந்த ஆதாரத்தையும் திரட்டவும் முடியவில்லை. அவர்கள் எப்படித் தங்கத்தைக் கடத்துகிறார்கள் என்று அறியவும் முடியவில்லை.

இந்த ஐந்து நாட்களில், சாத்விகா இரவு ஒரு அரைமணி நேரம் தான் ஆதனிடம் பேசுவாள். அதுவும் மற்றவர்களின் சந்தேகத்திற்கு ஆள்ளாக கூடாதென்று பார்த்துப் பார்த்துத் தான் பேசுவாள். ஆதனிற்கு அதுவே போதுமானதாக இருந்தது. அவள் தனக்கு அழைப்பதே அவள் பத்திரமாக இருக்கிறாள் என்று பொருள் கொள்ள வைக்கிறது. ஆதலால் அவன் அதற்கு மேல் அவளை வற்புறுத்த மாட்டான்.

அன்றும் அவள் ஆதனிடம் பேசி முடித்த பின்பு என்ன செய்வதென யோசித்துக் கொண்டிருந்தாள். எப்படிக் கண்டுபிடிப்பது எனத் தெரியாமல் மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்கும் போது தான் அவளுக்குத் தோன்றியது.

இரண்டு ஷிப்ட் வேலைச் செய்யும் தொழிலாளர்கள் எல்லாம் சாதாரணமாக சாக்லேட் செய்வது, அதை பேகெட் போட்டு சீல் வைப்பது, பின்னர் இடைக்கு ஏற்ப ஒவ்வொரு பெட்டியிலும் வைப்பது வரை தான் வேலைகளைச் செய்வார்கள். ஆனால் அந்தப் பெட்டிகளை அவர்கள் சீல் செய்ய மாட்டார்கள். அப்படியே எடுத்துக் கொண்டு போய் குடோவ்னில் வைப்பார்கள்.

ஆனால் அடுத்த நாள் காலையில் போய் பார்த்தாள் அதை எல்லாம் ஏற்றுமதி செய்ய லாரியில் ஏற்றும் போது அந்தப் பெட்டிகள் எல்லாம் சீல் செய்யப்பட்டிருக்கும். அப்போது இரவு நேரம் தனியாக வேறு ஒரு வேலை நடக்கிறது என்று புரிந்தது சாத்விகாவிற்கு. ஆனால் அதை எப்படிக் கண்டுபிடிப்பது என யோசிக்க ஆரம்பித்தாள். நாளை நேரில் சென்று பார்த்தாள் ஏதாவது தெளிவு கிடைக்கும் என்று யோசித்து விட்டுத் தூங்கச் சென்று விட்டாள்.

~~~~~~~~~~

ஆதனிற்கு அத்தனை நாள் தோன்றாத ஒன்று சும்மா உட்கார்ந்து இந்த வழக்கைப் பற்றி மீண்டும் யோசிக்கும் போது தோன்றியது. அதாவது ரம்யாவின் கணவன் சதீஷை அவன் முற்றிலும் மறந்து விட்டான்.

அவன் ரம்யா இறந்த அடுத்த நாள் அவளது வீட்டிற்குச் சென்ற போது அவன் சந்தேகித்த படி ஜன்னலில் இருந்த ஸ்கூரூவை யாரோ டைட் செய்திருந்தார்கள். அது கண்டிப்பாக சதீஷின் வேலையாகத் தான் இருக்க வேண்டுமென இப்போது தோன்றியது அவனுக்கு.

சதீஷிற்கும் இந்தக் குற்றத்தில் பங்கு இருப்பது புரிந்தது. அதை எப்படித் தெரிந்து கொள்ள என்று யோசிக்க ஆரம்பித்தான். இப்போது அவனால் காவலர்களை வைத்து எதுவும் செய்ய இயலாது. அதே போல் தனக்கு உதவியாக இருந்த எட்வினும் கட்சி மாறிவிட்டான். என்ன செய்வதென யோசித்த போது தான் அவனுக்கு சாத்விகாவின் நண்பர்கள் ஞாபகத்திற்கு வந்தார்கள்.

நேரம் காலம் எதையும் பார்க்காமல் இரவு பத்து மணிக்குப் பிரபுவிற்கு அழைத்தான் ஆதன். அவனது எண் மற்றும் தான் ஆதனிடம் இருந்தது. ஆதனின் எண்ணும் பிரபுவிடம் இருந்ததால் அவன் உடனே கைப்பேசியை எடுத்து விட்டான்.

“ஹலோ சார். என்ன இந்நேரம் கால் பண்ணிருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா?” என்று வேகமாகக் கேட்டான். அப்போது தான் ஆதன் நேரத்தையே பார்த்தான்.

“சாரி பிரபு. நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”

“அச்சோ இல்லை சார். நான் சும்மா தான் இருக்கேன். என்ன விஷயம்னு சொல்லுங்க.” என்று கேட்டான்.

“பிரபு, ரம்யா கொலை விஷயத்துல எனக்கு அவங்களோட ஹஸ்பெண்ட் மேல சந்தேகமா இருக்கு. என்னோட உள்மனசு அவனுக்கும் இந்தக் கொலைல சம்மதம் இருக்கும்னு தோனுது. இப்போதைக்கு என்னால போலிஸ் மூலமா எதுவும் செய்ய முடியாது. ஸோ ஐ நீட் யுவர் ஹெல்ப்.” என்றான் ஆதன்.

“சார் என்ன செய்யனும்னு மட்டும் சொல்லுங்க, அதை விட்டுட்டு ரெக்வெஸ்ட் எல்லாம் வேண்டாம். நீங்கள் ஆர்டரே பண்ணலாம்.” என்றான் பிரபு.

“எனக்கு சதீஷூடைய ஃபோன் ஸ்டேட்மென்ட் வேணும். லாஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ் உடையது வேண்டும். உங்களால ஹாக் பண்ணி எடுத்துத் தர முடியுமா?” என்று கேட்டான்.

“சார் இதெல்லாம் ரொம்ப ஈசியான வேலை. நாளைக்கு உங்க கைல ஸ்டேட்மென்ட் இருக்கும்.” என்றான் பிரபு.

“ரொம்ப தாங்க்ஸ் பிரபு.”

“சார் தாங்க்ஸ் எல்லாம் வேண்டாம். ராக்கிகாக நாங்கள் என்ன வேணாலும் பண்ணுவோம்.” என்று அவன் கூற, கேட்ட ஆதனிற்கு சாத்விகாவை நினைத்து பெருமையாக இருந்தது.

~~~~~~~~~~

சாத்விகா அன்று காலையில் எப்போதும் போல் எழுந்து குளித்து விட்டு வேலைக்குக் கிளம்பினாள். அன்று எப்படியாவது உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென முடிவெடுத்து விட்டாள் சாத்விகா.

அவர்களுக்கு நாட்களும் குறைவாக இருந்ததால், இன்று கண்டிப்பாக எப்படித் தங்கத்தைக் கடத்துகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற முடிவுடன் வேலைக்கு வந்தாள் சாத்விகா.

அன்றும் அவள் ஃபேக்ட்டரி உள்ளே செல்லும் போது லாரியில் சாக்லேட் அடங்கிய பெட்டிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆண்கள், பெண்கள் எனப் பாகுபாடு பாராமல் அனைவரும் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

சாத்விகா சென்றதும் அங்கு வேலைச் செய்யும் சூப்பர்வைஸர் அவளிடம் வந்து,”என்னமா இப்படி ஆடி அசஞ்சு வர? அதான் எல்லாரும் அடுக்கி வைச்சுட்டு இருக்காங்கள!! அதைப் பார்த்தும் சட்டுனு வரனும்னு தோனலையா!! வேலைப் பார்க்காமல் காசு வாங்கிட்டு போயிடலாம்னு பார்க்கிறியா? அதெல்லாம் செல்லுபடியாகாது. ஒழுங்கா போய் பெட்டியை லாரியில் வை.” என்று சத்தம் போட, சாத்விகாவிற்கு எரிச்சல் வந்துவிட்டது.

அவளது ஷிப்ட் நேரம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. ஆனால் அதைச் சொன்னால் தேவையில்லாத பிரச்சனை வரும். அதை விட அவள் வேலை செய்வது முக்கியமில்லை, உண்மையைக் கண்டுபிடிப்பது தான் முக்கியம். அந்த மேலாளரிடம் சண்டை போட்டால் அவள் காட்சிப் பொருளாகி விடுவாள். அதை விட அனைவரது கவனத்தையும் இந்தச் சண்டை ஈர்த்து விடும் என்பதால் அமைதியாகச் சென்று பெட்டியை வாங்கி அடுக்க ஆரம்பித்தாள்.

எல்லா பெட்டிகளையும் அடுக்கி வைத்தவுடன் மீண்டும் சாக்லேட் தயாரிக்கும் இடத்திற்குச் சென்றாள் சாத்விகா. போகும் வழி எங்கும் அவளிற்கு யோசனை தான். அவள் அடுக்கி வைத்த அனைத்துப் பெட்டிகளும் ஒரே மாதிரி தான் இருந்தது. அதில் எந்தக் குறியீடும் இல்லை. அதே போல் எடையும் ஒரே எடையாகத் தான் இருந்தது. அப்படி அவர்கள் தங்கள் கடத்துகிறார்கள் என்றால் ஏதாவது ஒரு பெட்டியாவது எடை அதிகமானதாக இருக்கும். ஆனால் இங்கு அப்படி எதுவும் இல்லை.

அவளுக்கு ஒரே வருத்தமாகி விட்டது. இப்படித் தொடர்ந்து தோல்வியே மிஞ்சுகிறது என்று. அவள் யோசித்து கொண்டே நடந்தால் வெகு தூரம் அவளையும் அறியாமல் நடந்து வந்து விட்டால். அது அந்த ஃபேக்ட்டரியின் கடைசிப் பகுதி ஆகும்.

திடீரெனச் சுவர் வந்ததும் தான் அவளுக்கு நினைவே வந்தது. அச்சோ இப்படி யோதித்துக் கொண்டே இவ்ளோ தூரம் நடந்து வந்து விட்டோமே என்று அவள் திரும்பும் போது தான் அவளது வலது பக்கத்தில் இருக்கும் சுவரைப் பார்த்தாள். அதில் ஏதோ வித்தியாசமாக இருப்பது போல் தெரிந்தது அவளுக்கு.

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி விட்டு அந்தச் சுவரின் பக்கத்தில் சென்று அதைத் தட்டிப் பார்த்தாள். அவள் தட்டியதில் வந்தச் சத்தம் சற்று வித்தியாசமாக இருக்க அப்போது தான் அவளுக்குப் புரிந்தது அது உண்மையான சுவர் கிடையாது என்று.

என்ன செய்யலாம் என்று அவள் யோசிக்கும் போது யாரோ வரும் சத்தம் கேட்க, வேகமாக அங்கு இருந்த மெஷின் பின்னால் சென்று மறைந்து நின்று கொண்டாள்.

அங்கு வந்தது பாண்டியும் அவனது ஆட்களும் தான். அவர்கள் சுற்றும் முற்றும் யாரும் இருக்கிறார்களா என்று ஒரு முறை பார்த்து விட்டு பாண்டி அவனது கையைச் சுவரில் ஓர் இடத்தில் வைக்க, அது அப்படியே ஸ்கேன் செய்து கதவு போல் திறந்தது. இதை ஆச்சரியத்துடன் பார்த்தாள் சாத்விகா. சத்தியமாக அவர்கள் இப்படித் தந்திரமாக யோசிப்பார்கள் என்று யோசிக்க வில்லை சாத்விகா.

எப்படியோ அவளுக்கு ஒரு வழி கிடைத்தது நினைத்துச் சந்தோஷப்பட்டாள் சாத்விகா. பாண்டியும் அவனது ஆட்களும் உள்ளே நுழையும் வரை மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் சாத்விகா.

அந்தப் பக்கம் என்ன இருக்கிறது என்று கொஞ்சம் எட்டிப் பார்க்க, அது ஒரு பெரிய அறை போல் காட்சியளித்தது. அங்குச் சில ஆட்கள் ஒரு தங்க பிஸ்கட்டை அதாவது ஒரு கிலோ எடையுள்ள தங்க பிஸ்கெட்டை சாக்லேட் கவரில் பேக் செய்து கொண்டிருந்தனர். இதைப் பார்த்த சாத்விகாவிற்கு குஷியாக இருந்தது. அவளது வேலை முடிந்த மாதிரி தான் என்று சந்தோஷம் அடைந்தாள்.

இன்று வேலை முடித்துப் போனதும் முதல் வேலையாக ஆதனிற்கு அழைத்து இதைப் பற்றிக் கூற வேண்டுமென முடிவெடுத்து அவர்கள் செல்லும் வரை அமைதியாக அங்கே நின்றிருந்தாள் சாத்விகா.

அவர்கள் சென்றவுடன், யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து நழுவி பாத்ரூம் இருக்கும் திசைக்குச் சென்று அங்கிருந்து வருவது போல் பாசாங்குச் செய்து விட்டு அவள் வேலைச் செய்யும் பகுதிக்கு வந்தாள் சாத்விகா. அதனால் யாரும் அவளைச் சந்தேகிக்க வில்லை.

சரியாக மூன்று மணியானதும் அனைவரும் போல் அவளும் வேலையிலிருந்து கிளம்ப, அங்குத் திடீரென வந்த பாண்டியின் ஆட்கள் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். என்ன ஏது என்று யோசிக்கும் முன்பே அவளை அள்ளிச் சென்று விட்டார்கள் அவர்கள்.

சாத்விகா அவர்களைச் சிக்க வைக்க நினைத்து அவர்களது கோட்டைக்குள் வந்தாள். ஆனால் இப்போது அவளே அவர்களிடம் சிக்கிக் கொண்டாள். காப்பாற்ற நாயகன் வருவானா அல்லது நாயகியே தனது பலத்தால் அங்கிருந்து தப்பிப்பாளா?

Advertisement